“இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங்கள் - ஒரு ஒப்பீட்டுப் பகுப்பாய்வு” என்ற அறிக்கையின் இரண்டாவது பதிப்பானது ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கோயஸ் ஏஜ் கன்சல்டிங் என்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள தரவுகளின் படி, டிஜிட்டல் செயல்பாடுகளில் சத்தீஸ்கர் மாநிலம் முதலாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இந்த அறிக்கையில் சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
தற்பொழுது 5வது இடத்தைப் பிடித்துள்ள மத்தியப் பிரதேசம் 2017 ஆம் ஆண்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அறிக்கையின் முதலாவது பதிப்பானது 2017 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது.