TNPSC Thervupettagam

இந்தியாவின் தங்க நிற மந்திகளின் எண்ணிக்கை 2024

March 14 , 2024 127 days 222 0
  • சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7,396 தங்க நிற மந்திகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தங்க நிற மந்திகள் (டிராச்சிபிதேகஸ் கீயி), மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் அசாமின் மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு காடுகளிலும் காணப்படுகின்றன.
  • தங்க நிற மந்திகளின் எண்ணிக்கையானது வடக்கில் பரந்து விரிந்த பகுதியில் அதிகளவில் காணப்படுபவை மற்றும் தெற்கு சிறு சிறு பகுதிகளில் காணப்படுபவை என இரண்டு பெரிய துணை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • 2008-09 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 6,000 தங்க நிற மந்திகள் இருப்பதாகப் பதிவாகியிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்