2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தங்க முதலீடுகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் 60% அதிகரித்து, 18 பில்லியன் டாலர்களை (தோராயமாக 1.5 லட்சம் கோடி ரூபாய்) எட்டின.
உலக தங்கச் சபையின் (WGC) அறிக்கையானது, தங்க முதலீட்டு தேவையானது 239 டன்களாக இருந்ததாகக் கூறுகிறது, மேலும் இது 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 185 டன்களிலிருந்து 29% அதிகரிப்பாகும்.
சுமார் 239 டன்களில், நாட்டின் தங்க முதலீடு ஆனது, இந்தப் பிரிவில் உலகளாவியத் தேவையில் 20% ஆகும் என்பதோடு இது 2024 ஆம் ஆண்டில் 1,180 டன்களாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் 945.5 டன்களாக பதிவான உலகளாவிய தேவையும் 25% அதிகரித்து உள்ளது.