கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கு திறம்பட மாறுவதன் மூலம் ஆற்றல் மாற்றத்திற்கான வழிமுறையை காட்டியுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள், முக்கியமாக சூரியசக்தி மற்றும் காற்று ஆற்றல் ஆகியவை, கர்நாடகாவின் மொத்த எரிசக்தி நுகர்வில் 37 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன என்ற நிலையில் இது அனைத்து மாநிலங்களின் மத்தியல் பதிவான அதிக சதவீதப் பங்குகளில் ஒன்றாகும்.
இருப்பினும், நீர்மின்னாற்றலைச் சார்ந்திருக்கும் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றினை போல அதன் பங்கு இன்னும் அதிகளவில் இல்லை.
2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 24 சதவீத ஆற்றலை குஜராத் உற்பத்தி செய்துள்ளது.
மாநிலத்தின் மொத்த ஆற்றல் நுகர்வில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நுகர்வின் பங்கு ஆனது 17 சதவீதம் மட்டுமே ஆகும்.
ஒடிசா, டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆற்றல் உற்பத்தி சூழல் அமைப்பு மற்றும் சந்தையைச் செயல்படுத்துவதற்கான தயார்நிலை போன்ற அளவுருக்களில் சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளன.