இந்தியாவின் தென்கோடி பகுதியில் உள்ள கழுகுகளின் கணக்கெடுப்பு
January 27 , 2024 302 days 260 0
நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில் (NBR), சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட ஒத்திசைவு கழுகு கணக்கெடுப்பில் 300க்கும் மேற்பட்ட கழுகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில்;
மொத்தம் 217 மிகவும் அருகிய நிலையில் உள்ள வெண்முதுகுக் கழுகுகள் (ஜிப்ஸ் பெங்கலென்சிஸ்),
47 கருங்கழுத்துக் கழுகுகள் (ஜிப்ஸ் இண்டிகஸ்),
50 ஆசிய ராச கழுகுகள் (சர்கோஜிப்ஸ் கால்வஸ்),
அருகிய நிலையில் உள்ள நான்கு எகிப்தியக் கழுகுகள் (நெப்போலியன் பெர்க்நோப்டெரஸ்) மற்றும்
இரண்டு "அச்சுறுத்தல் நிலையை அண்மித்த" இமயமலை பிணந்திண்ணிக் கழுகுகள் (ஜிப்ஸ் ஹிமாலயென்சிஸ்) பதிவு செய்யப் பட்டுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்ட கழுகுகளில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவை நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் முதுமலை-சத்தியமங்கலம் -பந்திப்பூர் - வயநாடு வளாகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
தமிழகத்தில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகங்களில் அதிக எண்ணிக்கையிலான கழுகுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட கடைசி ஒத்திசைவு கழுகு கணக்கெடுப்பில், 246 கழுகுகள் பதிவு செய்யப்பட்டன.
2023 ஆம் ஆண்டு டிசம்பரி மாதத்தில் நடத்தப்பட்ட அண்மை கணக்கெடுப்பில், பதிவு செய்யப் பட்ட கழுகுகளின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை வனப் பிரிவு மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் நான்கு எகிப்திய கழுகுகளும், இரண்டு இமயமலைக் கழுகுகளும் தென்பட்டன.