TNPSC Thervupettagam

இந்தியாவின் தென்கோடி பகுதியில் உள்ள கழுகுகளின் கணக்கெடுப்பு

January 27 , 2024 302 days 259 0
  • நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில் (NBR), சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட ஒத்திசைவு கழுகு கணக்கெடுப்பில் 300க்கும் மேற்பட்ட கழுகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இது கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தக் கணக்கெடுப்பில்;
    • மொத்தம் 217 மிகவும் அருகிய நிலையில் உள்ள வெண்முதுகுக் கழுகுகள் (ஜிப்ஸ் பெங்கலென்சிஸ்),
    • 47 கருங்கழுத்துக் கழுகுகள் (ஜிப்ஸ் இண்டிகஸ்),
    • 50 ஆசிய ராச கழுகுகள் (சர்கோஜிப்ஸ் கால்வஸ்),
    • அருகிய நிலையில் உள்ள நான்கு எகிப்தியக் கழுகுகள் (நெப்போலியன் பெர்க்நோப்டெரஸ்) மற்றும்
    • இரண்டு "அச்சுறுத்தல் நிலையை அண்மித்த" இமயமலை பிணந்திண்ணிக் கழுகுகள் (ஜிப்ஸ் ஹிமாலயென்சிஸ்) பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்ட கழுகுகளில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவை நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் முதுமலை-சத்தியமங்கலம் -பந்திப்பூர் - வயநாடு வளாகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • தமிழகத்தில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகங்களில் அதிக எண்ணிக்கையிலான கழுகுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட கடைசி ஒத்திசைவு கழுகு கணக்கெடுப்பில், 246 கழுகுகள் பதிவு செய்யப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பரி மாதத்தில் நடத்தப்பட்ட அண்மை கணக்கெடுப்பில், பதிவு செய்யப் பட்ட கழுகுகளின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.
  • நெல்லை வனப் பிரிவு மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் நான்கு எகிப்திய கழுகுகளும், இரண்டு இமயமலைக் கழுகுகளும் தென்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்