கல்வி அமைச்சகமானது, பொதுச் சேவை மையங்கள் (CSCs) மூலம் கிராமப்புறங்களில் தானியங்கு நிரந்தர கல்விக் கணக்கு பதிவேட்டை (APAAR) சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
APAAR திட்டமானது தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியாக கருத்தாக்கப் பட்டுள்ளது.
கல்லூரி / பல்கலைக் கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் கல்விநிலை தொடர்பான தரவுகளை (Academic Bank of Credits) பதிவு செய்வதை இது கட்டாயம் ஆக்குகிறது.
கல்வி நிலை தொடர்பான தரவுகள் என்பது எண்ணிமச் சேமிப்பகம் போன்றது என்ற நிலையில் இதன் மூலம் மாணவர்கள் அதன் பலன்களைப் பெறலாம்.
இந்த எண்ணிமத் தரவு உள்ளீட்டு சேமிப்பகத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் / தரவரிசை அனைத்தும் சேமிக்கப்படும்.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களும் இங்கு சேமிக்கப்படும்.
இந்த APAAR அடையாள எண்ணினைக் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் இனி எந்த இடத்திலும் சான்றிதழ்களை வழங்கத் தேவையில்லை என்ற நிலையில் வெறும் APAAR அடையாள எண்ணினை மட்டும் கொடுத்தால் போதுமானது.