TNPSC Thervupettagam

இந்தியாவின் தொலைதூரக் கிராமங்களில் APAAR

April 4 , 2024 106 days 254 0
  • கல்வி அமைச்சகமானது, பொதுச் சேவை மையங்கள் (CSCs) மூலம் கிராமப்புறங்களில் தானியங்கு நிரந்தர கல்விக் கணக்கு பதிவேட்டை (APAAR) சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
  • APAAR திட்டமானது தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020)  ஒரு பகுதியாக கருத்தாக்கப் பட்டுள்ளது.
  • கல்லூரி / பல்கலைக் கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் கல்விநிலை தொடர்பான தரவுகளை (Academic Bank of Credits) பதிவு செய்வதை இது கட்டாயம் ஆக்குகிறது.
  • கல்வி நிலை தொடர்பான தரவுகள் என்பது எண்ணிமச் சேமிப்பகம் போன்றது என்ற நிலையில் இதன் மூலம் மாணவர்கள் அதன் பலன்களைப் பெறலாம்.
  • இந்த எண்ணிமத் தரவு உள்ளீட்டு சேமிப்பகத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் / தரவரிசை அனைத்தும் சேமிக்கப்படும்.
  • மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களும் இங்கு சேமிக்கப்படும்.
  • இந்த APAAR அடையாள எண்ணினைக் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
  • மாணவர்கள் இனி எந்த இடத்திலும் சான்றிதழ்களை வழங்கத் தேவையில்லை என்ற நிலையில் வெறும் APAAR அடையாள எண்ணினை மட்டும் கொடுத்தால் போதுமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்