இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆனது, 2024-25 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல் 2024-ஜனவரி 2025) 1.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என்ற நிலையில் இது ஓராண்டிற்கு முன்னதாக 11.5 பில்லியன் டாலராக இருந்தது.
இருப்பினும், மொத்த அந்நிய நேரடி முதலீடு உயர்ந்தே உள்ளது என்பதோடு 2024 ஆம் ஆண்ட ஏப்ரல் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வருடாந்திர வளர்ச்சியுடன் 67.7 பில்லியன் டாலராக இருந்தது.
இது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலக் கட்டத்தில் 60.2 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தியாவில் நேரடி முதலீடு செய்தவர்களின் பணம் அனுப்புதல் / முதலீடு திரும்பப் பெறுதல் ஆனது 2024-25 ஆம் ஆண்டின் 10 மாதக் காலத்தில் சுமார் 46.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள், அதாவது, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் FDI ஆனது, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 20.2 பில்லியன் டாலராக கடுமையாக உயர்ந்தது என்பதோடு இது ஓராண்டிற்கு முன்னதாக சுமார் 11.8 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூர், மொரீஷியஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்தில் இருந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டது.
NRI வைப்புத் திட்டங்களில் வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து வரும் பண வரவானது ஆண்டிற்கு 40.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலக் கட்டத்தில் இது சுமார் 10.16 பில்லியன் டாலரில் இருந்து சுமார் 14.30 பில்லியன் டாலராக உயர்த்தப் பட்டுள்ளது.