TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் ஃபுளூரைடு மாசுபாடு

December 8 , 2023 224 days 135 0
  • இந்தியாவின் 25 மாநிலங்களில் உள்ள 230 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் 27 மாநிலங்களில் உள்ள 469 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் ஃபுளூரைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) தெரிவிக்கப்பட்ட இந்த நிலத்தடி நீர் மாசுபாடு ஆனது, பெரும்பாலும் புவியியல் சார்ந்த இயல்புடையது என்பதோடு இதில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் பதிவாகவில்லை.
  • இந்த மாசுபாடு ஆனது முதன்மையாக புவியியல் இயக்கம் சார்ந்ததாகும் என்ற நிலையில் இவை இயற்கையாகவே பாறை அல்லது மண் கட்டமைப்புகளில் உள்ளதாகவும், இவை பல்வேறு வேதிச் செயல்முறைகள் மூலம் நிலத்தடி நீரில் நுழைவதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆனது, நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் ஃபுளூரைடு ஆகியவற்றின் மாசுபாடு உட்பட நிலத்தடி நீரின் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்கிறது.
  • CGWB மற்றும் இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு சமீபத்தியப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிலத்தடி நீர் மாசுபாடு பற்றிய ஆய்வுகளை இலக்காக வைத்துள்ளது.
  • பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம் ஆகிய எட்டு மாநிலங்களின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் ஃபுளூரைடு மாசுபாடு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்