TNPSC Thervupettagam

இந்தியாவின் நீண்டகால முதலமைச்சர்

May 4 , 2018 2269 days 2013 0
  • இந்திய மாநிலம் ஒன்றில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த முதலமைச்சராக (longest-serving chief minister) சிக்கிம் மாநில முதலமைச்சர் பவன் சம்லிங் (Pawan Chamling) உருவாகியுள்ளார். அண்மையில் பவன் சம்லிங் எவ்வித இடைத்தடைக் காலமும் இல்லாத 25-வது வருடத்தை முதலமைச்சராக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இவர் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான திரு ஜோதி பாசு அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • 1993-ஆம் ஆண்டு திரு. பவன் சம்லிங் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை (Sikkim Democratic Front Party) தொடங்கினார்.
  • சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் நிறுவனரான இவர் 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் ஆனார்.
  • சிக்கிம் மாநிலத்தை மாற்றுவதற்காக “புது சிக்கிம் மகிழ்ச்சியான சிக்கிம்” (New Sikkim, Happy Sikkim) என்ற முழக்கத்தோடு பவன் சம்லிங் பல்வேறு அரசுக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை துவங்கியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்