TNPSC Thervupettagam

இந்தியாவின் நீர்வள மதிப்பீடு 2024

December 20 , 2024 7 days 67 0
  • மத்திய நீர் வள ஆணையம் (CWC) ஆனது, ‘இந்தியாவின் நீர் வளங்களின் மதிப்பீடு 2024’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் சராசரி வருடாந்திர நீர் இருப்பு ஆனது, 1985 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 2,115.95 பில்லியன் கன மீட்டர் (BCM) என மதிப்பிடப்பட்டு உள்ளது.
  • பிரம்மபுத்திரா (592.32 BCM), கங்கை (581.75 BCM), மற்றும் கோதாவரி (129.17 BCM) ஆகியவை இந்தியாவில் உள்ள அதிக நீர் இருப்பைக் கொண்ட முதல் மூன்று நதிப் படுகைகள் ஆகும்.
  • சபர்மதி (9.87 BCM), பெண்ணாறு (10.42 BCM), மற்றும் மாஹி (13.03 BCM) ஆகியவை நீர் இருப்பின் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள மூன்று நதிகள் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான சராசரி வருடாந்திர தனிநபர் நீர் இருப்பு 1,513 கன மீட்டர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்