மத்திய நீர் வள ஆணையம் (CWC) ஆனது, ‘இந்தியாவின் நீர் வளங்களின் மதிப்பீடு 2024’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் சராசரி வருடாந்திர நீர் இருப்பு ஆனது, 1985 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 2,115.95 பில்லியன் கன மீட்டர் (BCM) என மதிப்பிடப்பட்டு உள்ளது.
பிரம்மபுத்திரா (592.32 BCM), கங்கை (581.75 BCM), மற்றும் கோதாவரி (129.17 BCM) ஆகியவை இந்தியாவில் உள்ள அதிக நீர் இருப்பைக் கொண்ட முதல் மூன்று நதிப் படுகைகள் ஆகும்.
சபர்மதி (9.87 BCM), பெண்ணாறு (10.42 BCM), மற்றும் மாஹி (13.03 BCM) ஆகியவை நீர் இருப்பின் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள மூன்று நதிகள் ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான சராசரி வருடாந்திர தனிநபர் நீர் இருப்பு 1,513 கன மீட்டர் ஆகும்.