கிழக்கின் அருகே உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் முகமையின் (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East - UNRWA) உடனடி வேண்டுகோளுக்குப் பதில் தரும் விதத்தில் இந்திய அரசு தனது வருடாந்திரப் பங்களிப்பை 2018-19ம் ஆண்டில் இருந்து மூன்று வருடங்களுக்கு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலிருந்து 5 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்தியா தனது UNRWA என்ற அமைப்பிற்கான வருடாந்திரப் பங்களிப்பை கணிசமாக உயர்த்துவது பற்றிய அறிவிப்பை ரோமில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தது.
உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு, மதிப்புமிக்க பொது சேவைகளை (Valuable Public Services) வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் UNRWA நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலவி வரும் அதிக பட்ச நிதி நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில் இந்த அதிகரிப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.