இந்தியாவின் பண வரவு குறித்த ஆறாவது கணக்கெடுப்பு 2023/24
March 23 , 2025 8 days 51 0
2010-11 ஆம் ஆண்டில் 55.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் பண வரவுத் தொகையானது 2023-24 ஆம் ஆண்டில் 118.7 பில்லியன் டாலர் ஆக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
உலகளாவிய பணப் பரிமாற்றங்களில் 14.3 சதவீதப் பங்குடன், இந்தியாவின் மொத்தப் பண வரவுத் தொகையானது 2024 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலராக அதிகரித்தது.
இந்தியாவின் மொத்தப் பண வரவுத் தொகையில் 27.7 சதவீதப் பங்கைக் கொண்டு மிகப்பெரியப் பங்களிப்பாளராக ஐக்கிய அரபு அமீரகத்தினை அமெரிக்கா விஞ்சி உள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும் பங்கானது சுமார் 26.9 சதவீதத்திலிருந்து 19.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதே போல், 2016-17 ஆம் ஆண்டில் 3 சதவீதப் பங்கை மட்டுமே கொண்டிருந்த ஐக்கியப் பேரரசு ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 10.9 சதவீத பங்குடன் சவுதி அரேபியாவை விஞ்சி உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலமானது, 20.5 சதவீத பங்கைக் கொண்டு உள்ளது.
அதே காலக் கட்டத்தில் சுமார் 10 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்த கேரள மாநிலத்தின் பங்கானது 19.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (10.4 சதவீதம்), தெலுங்கானா (8.1 சதவீதம்) மற்றும் கர்நாடகா (7.7 சதவீதம்) உள்ளன.