பணக்காரச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு (223 சட்டமன்ற உறுப்பினர்) அதிக சராசரி சொத்துக்களைக் கொண்ட மாநிலமாகவும் இது உருவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரிச் சொத்து மதிப்பு 64.39 கோடி ரூபாயாகும்.
இதைத் தொடர்ந்து 28.24 கோடி சராசரிச் சொத்து மதிப்புடன் ஆந்திரப் பிரதேசம் (174 சட்டமன்ற உறுப்பினர்கள்), 23.51 கோடி சராசரிச் சொத்து மதிப்புடன் மகாராஷ்டிரா (284 சட்டமன்ற உறுப்பினர்கள்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
59 சட்டமன்ற உறுப்பினர்கள் சராசரியாகக் கொண்டுள்ள 1.54 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மிகக் குறைந்தச் சராசரி சொத்துக்களைக் கொண்டுள்ள மாநிலமாக திரிபுரா திகழ்கிறது.
2023 ஆம் ஆண்டில், கர்நாடகாவின் கனகபுராவைச் சேர்ந்த D.K. சிவக்குமார் (INC) 1,413 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தச் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேற்கு வங்காளத்தின் சிந்து (SC) தொகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் தாரா (BJP-2021) 1,700 ரூபாய் மதிப்புடன் மொத்தச் சொத்து மதிப்பு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.
பணக்காரச் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் (719 சட்டமன்ற உறுப்பினர்களில் 33 பேர், 5 சதவீதம்).
BJP கட்சியானது அதற்கு அடுத்தபடியாக 1,356 சட்டமன்ற உறுப்பினர்களில் 24 பேர் (2 சதவீதம்), 100 கோடி ரூபாய்க்கு மேலானச் சொத்து மதிப்புகளைக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரிச் சொத்து மதிப்பு 13.63 கோடி ரூபாயாகும்.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 4,001 சட்டமன்ற உறுப்பினர்களில் 1,777 சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களில் (சுமார் 53%) 37 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.