TNPSC Thervupettagam

இந்தியாவின் பணக்காரப் பெண்மணி

August 18 , 2018 2293 days 697 0
  • கோடக் வெல்த் ஹுயுரனின் 2018 ஆம் ஆண்டிற்கான முதன்மை பணக்காரப் பெண்கள் பட்டியலில் கோத்ரேஜ் குடும்பத்தின் வழித்தோன்றலான மூன்றாம் தலைமுறை வாரிசுகளான  ஸ்மிதா வி கிருஷ்னா (ரூ.37,570 கோடி) முதலிடம் பிடித்துள்ளார்.
  • HCL–ன் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குநரான ரோஷ்னி நாடார் இப்பட்டியலில் இரண்டாவது இடம் (ரூ.30,200 கோடி) பிடித்துள்ளார்.
  • டைம்ஸ் குழுவின் தலைவரான இந்து ஜெயின் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.26,240 கோடி ஆகும்.
  • பயோகானின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநரான கிரண் மஜூம்தார் – ஷா இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். HCL நிறுவனரான ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
  • ஹுயுரன் இந்திய பணக்கார பட்டியலில் பெண்கள் 2012-ல் 4 சதவீதமாக இருந்தனர். இது தற்போது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • தொழிற்துறை வாரியாக, 22 பெண்களைக் கொண்ட மருத்துவத் துறை இப்பட்டியலில்  முன்னிலை வகிக்கிறது.
  • இதற்கு அடுத்து 12 பெண்களைக் கொண்ட மென்பொருள் துறை இரண்டாமிடத்திலும் அதற்கு அடுத்து 8 பெண்களைக் கொண்ட உணவு மற்றும் பானங்கள் துறை மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • நகர வாரியாக, தலா 25 பெண்களைக் கொண்டு மும்பை மற்றும் தில்லி ஆகிய இரு நகரங்கள் இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கு அடுத்து பெங்களுரு (14) இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்