குஜராத் மற்றும் வடக்குப் பகுதியில் மிக குறைவான மகசூல் காரணமாக, அக்டோபர் மாதம் தொடங்கும் நடப்பு பருவத்தில் (2024-25) ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தி 301.75 லட்சம் பேல்களாகக் குறையும் என்று மதிப்பிடப் பட்டுள்ளதாக இந்தியாவின் பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டின் முந்தைய பருவத்தில், பருத்தி உற்பத்தியானது சுமார் 327.45 லட்சம் பேல்களாக இருந்தது.
இந்த மதிப்பீடுகள் குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பதிவான குறைவானப் பருத்தி மகசூல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வரையில் பதிவான மொத்தப் பருத்தி விநியோகம் 234.26 லட்சம் பேல்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டு பயிர்ப் பருவத்திற்கான ஏற்றுமதிகள் ஆனது, 17 லட்சம் பேல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது 2023-24 ஆம் பயிர்ப் பருவத்திற்கு சுமார் 28.36 லட்சம் பேல்களாக மதிப்பிடப் பட்டது.