TNPSC Thervupettagam

இந்தியாவின் பழங்கால குறுகிய இரயில் பாதை

July 15 , 2018 2323 days 816 0
  • 1862 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்த 33 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்தியாவின் முதல் குறுகிய இரயில் பாதையான தபோய் – மியாகம் இரயில் பாதை நிரந்தரமாக மூடப்பட இருக்கிறது.
  • இந்த இரயில் பாதை விரைவில் அகல இரயில் பாதையாக மாற்றப்பட இருக்கிறது.
  • ஏ டபிள்யூ போர்ட் (A.W.ford) என்ற பிரிட்டீஷ் பொறியாளரால் இப்பாதை வடிவமைக்கப்பட்டது.
  • 1863 ஆம் ஆண்டு நீராவி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 3 நீராவி இன்ஜின்களை பரோடா மாகாணத்தின் மகாராஜா கேந்திரியோ விலைக்கு வாங்கினார்.
  • நாட்டில் பாரம்பரியச் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பாதுகாக்கப்பட உள்ள ஐந்து குறுகிய இரயில் பாதைகளில் ஒன்றாக மேற்கு இரயில்வேயின் தபோய்-மியாகம் இரயில் பாதையை மத்திய ரயில்வே அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
  • மியாகம் – மல்தார் இரயில் பாதை (38 கி.மீ), சரோண்டா – மோட்டி காரல் இரயில் பாதை (19 கி.மீ.), தி பிரதாப் நகர் – ஜம்புசர் இரயில் பாதை (51 கி.மீ) மற்றும் பில்மோரா – வாது இரயில் பாதை ஆகியவை பாதுகாப்பதற்காக கண்டறியப்பட்ட மற்ற இரயில் பாதைகளாகும்.
  • இந்த 5 இரயில் பாதைகளும் மொத்தமாக 204 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இப்பாதைகள் குஜராத்தில் உள்ளன. இப்பாதைகள் முந்தைய சுதேச அரசான பரோடா அரசினால் வடிவமைக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்