TNPSC Thervupettagam

இந்தியாவின் பழமையான கோவில்

March 30 , 2024 270 days 379 0
  • இந்தியாவின் மிகப் பழமையான கோவிலைக் கண்டறிவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள நாச்னே என்ற கிராமத்தில் உள்ள இரண்டு மேட்டுப் பகுதிகளில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வு ஒன்றினை மேற் கொண்டு வருகிறது.
  • இந்த அகழ்வாராய்ச்சித் தளங்கள் குப்தர் காலப் பார்வதி கோவில் மற்றும் காலச்சூரி வம்சத்தால் கட்டமைக்கப்பட்ட சௌமுகி கோவில் ஆகிய இரண்டு மிகப் பழமையான கோவில்களுக்கு அருகில் உள்ளன.
  • மத்தியப் பிரதேசத்தில், குப்தர்கள் காலத்தைச் சேர்ந்த, கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய 'சாஞ்சி 17' உட்பட பல பழமையான கோயில்கள் உள்ளன.
  • இக்கோயில் ஆனது இன்று வரையில் இந்தியாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான முழுமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
  • அகழ்வாராய்ச்சிக் குழுவானது குப்தர் காலத்துக்கு முற்பட்ட பல்வேறு கோயில்களைக் கண்டறியக் கூடும் என்று நம்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்