TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதாம் நுகர்வு

April 21 , 2018 2409 days 742 0
  • பிப்ரவரி வரையிலான இந்த சாகுபடி காலத்தில் (ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018) ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகளை பாதாம் நுகர்வில் முந்திச் சென்று இந்தியா மிகப்பெரிய பாதாம் இறக்குமதியாளராக உருவெடுத்துள்ளது என கலிபோர்னியாவின் பாதாம் வாரியம் தெரிவித்துள்ளது.
  • பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயின் 119 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவிலும், சீனா 138 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவிலும் பாதாமை இறக்குமதி செய்துள்ளன.
  • 2016-2017 சாகுபடி காலகட்டத்தில் இந்தியா 167 மில்லியன் பவுண்டுகள் பாதாம் பருப்பை இறக்குமதி செய்து, சீனாவை முந்திச் சென்று 2-வது இடத்தைப் பிடித்தது. இது கடந்த ஆண்டை விட 33% அதிகமாகும். கடந்த ஆண்டில் இந்தியா 125 மில்லியன் பவுண்டுகள் அளவிலான பாதாமை இறக்குமதி செய்தது.
  • 2016-17 காலகட்டத்தில் ஸ்பெயின் 210 மில்லியின் பவுண்டுகள் அளவிலான பாதாமை இறக்குமதி செய்து மிகப்பெரிய இறக்குமதியாளர் என்ற பெருமையைப் பெற்றது. அதே நேரத்தில் சீனா 150 மில்லியன் பவுண்டுகள் இறக்குமதி செய்தது.
  • உலகின் மொத்த பாதாம் உற்பத்தியில் கலிபோர்னியா 80% பாதாமை உற்பத்தி செய்கிறது. இதில் 33%-ஐ அமெரிக்காவும் கனடாவும் நுகர்கின்றன. 67% பாதாம் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
  • 2004-2005 காலகட்டத்தில் ஆசியா – பசிபிக் மண்டலத்திற்கு 25% அளவுக்கான ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி தற்போது 38% அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஏற்றுமதியானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்