2024-25 ஆம் நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ஆனது, 23,622 கோடி ரூபாயாக (தோராயமாக 2.76 பில்லியன்) உயர்ந்துள்ளது.
இது சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 2,539 கோடி ரூபாய் அல்லது 12.04% உயர்வைக் குறிக்கிறது.
2024-25 ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு தனியார் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் முறையே 15,233 கோடி ரூபாய் மற்றும் 8,389 கோடி ரூபாய் பங்களித்துள்ளன.
அதே காலக் கட்டத்தில் மொத்த ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையும் சுமார் 17.4% அதிகரித்துள்ளது.