இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து
September 12 , 2019 1903 days 793 0
இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிமுறைகள், 2011ஐ மீறியதற்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது இந்திய பாராலிம்பிக் குழுவின் (Paralympic Committee of India - PCI) அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையானது PCIன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பானதாகும்.
இதுபற்றி
PCI ஆனது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதற்கு முன்னர் இது ‘இந்திய உடல் ஊனமுற்றோர் விளையாட்டுக் கூட்டமைப்பு’ என்று பெயரிடப்பட்டது.
இது பாராலிம்பிக் விளையாட்டுக்கள் (அல்லது பாராலிம்பிக்ஸ்) மற்றும் பிற சர்வதேசத் தடகள போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேசிய அமைப்பாகும்.