ஜனவரி 01 ஆம் தேதியன்று நள்ளிரவு 12:03 மணிக்கு மிசோரமில் உள்ள ஐஸ்வாலில் பிறந்த பீட்டா தலைமுறையின் முதல் குழந்தையாக பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங் பிறந்தார்.
ஆஸ்திரேலிய எதிர்காலவாதியான மார்க் மெக்ரிண்டில் என்பவர் இந்தச் சொல்லினை உருவாக்கினார்.
இந்த பீட்டா தலைமுறையில் 2025 மற்றும் 2039 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.
இந்த நபர்கள் மில்லினியல்கள் (தலைமுறை Y) மற்றும் பழைய ஜென் Z பெற்றோரின் சந்ததிகளாக இருப்பார்கள்.
2035 ஆம் ஆண்டில், உலகளாவிய மக்கள்தொகையில் பீட்டா தலைமுறையின் பெரும் பங்கானது 16% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு இது எதிர்காலச் சமூக மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் அவர்களின் மிகப்பெரும் குறிப்பிடத்தக்கதொரு பங்கைப் பிரதிபலிக்கிறது.