மிகவும் அதிகரித்து வரும் உலகளாவிய தேவை காரணமாக இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் டாலர் மதிப்பின் அடிப்படையில் இரட்டிப்பாகி உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 923 மில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு ஆனது, நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையில் 1,840 மில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் அவை 2 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கு புகையிலை ஏற்றுமதியானது 2024-25 ஆம் ஆண்டின் ஏப்ரல்-பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் 38.59 சதவீத வளர்ச்சியுடன் 1,840.70 மில்லியன் டாலராக இருந்தது என்ற ஒரு நிலையில் இது ஓராண்டிற்கு முன்னதாக 1,328.17 மில்லியன் டாலராக இருந்தது.
புகையிலை ஏற்றுமதியானது பிப்ரவரி மாதத்தில் 141.80 மில்லியன் டாலராக (111.87 மில்லியன் டாலர்) இருந்தது.