TNPSC Thervupettagam

இந்தியாவின் புதியப் பாராளுமன்றம்

May 30 , 2023 420 days 216 0
  • மத்திய எழில் முற்றத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பிரதமர் புது தில்லியில் திறந்து வைத்தார்.
  • புதியப் பாராளுமன்றக் கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டு 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப் பட்டுள்ளது.
  • மக்களவை நடைபெறும் பகுதியில் தற்சமயம் 888 இருக்கைகள் உள்ள நிலையில் அதை மேலும் 1,272 இருக்கைகளாக விரிவுபடுத்தி கொள்ளும் வகையில்  அமைக்கப் பட்டுள்ளது.
  • 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டு இருந்த காந்தி சிலையானது கட்டுமானப் பணியின் போது மாற்றப் பட்டுள்ளது.
  • தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் 9,500 கிலோ எடையும் 6.5 மீட்டர் உயரத்தில் தேசியச் சின்னமான அசோகச் சின்னம் இந்தக் கட்டிடத்தில் நிறுவப் பட்டு ள்ளது.
  • புதியப் பாராளுமன்றத் திறப்பு விழாவையொட்டி அதன் நினைவு தபால் தலையும், 75 ருபாய் சிறப்பு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்