TNPSC Thervupettagam

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை 2024

January 26 , 2025 11 hrs 0 min 40 0
  • 2024 ஆம் ஆண்டில் 24.5 ஜிகாவாட் (GW) அளவிலான சூரிய மின்னாற்றல் திறனும் 3.4 GW காற்றாற்றல் திறனும் உற்பத்தி செய்யப் பட்டதுடன் இந்தியா ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது.
  • இந்தியாவின் மொத்த புதைபடிவம் சாரா எரிபொருள் சார்ந்த ஆற்றல் உற்பத்தி திறன் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 217.62 GW ஆக உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW அளவிலான புதைபடிவம் சாரா எரிபொருள் சார்ந்த ஆற்றல் உற்பத்தி திறன் என்ற ஒரு இலக்கை அடையும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் சூரிய மின் ஆற்றல் உற்பத்தி அமைப்புகளின் நிறுவல்கள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்து உள்ளது என்பதோடு காற்றாலை உற்பத்தி அமைப்புகளின் நிறுவல்கள் சுமார் 21% அதிகரித்துள்ளன.
  • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனில் சூரிய மின்னாற்றல் தற்போது 47% பங்கினைக் கொண்டுள்ளது.
  • மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி துறை ஆனது 53% வளர்ச்சியடைந்து, 4.59 GW அளவிலான திறனைப் புதிதாக நிறுவியுள்ளது.
  • குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை மிகப் புதியதாக நிறுவப்பட்ட 3.4 GW காற்றாலை ஆற்றலில் 98% பங்கினை அளிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்