இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் அது 3,682 ஆக அதிகரித்துள்ளது.
இது நான்காண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பினை மேற்கொள்கின்ற இந்திய வனவுயிரியல் நிறுவனத்தால் மதிப்பிடப் பட்டது.
2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 23.5% அதிகரித்துள்ளது.
இது கடந்தப் பத்தாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டில் 2,226 புலிகள் பதிவாகியுள்ளன.
உலகிலுள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன.
இதில் சுமார் 80% புலிகள் (2,885) தற்போது புலிகளின் வாழ்விடப் பகுதிகளைக் கொண்ட 18 மாநிலங்களில் 8 மாநிலங்களில் காணப்படுகின்றன.
அவை மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அசாம் உள்ளிட்டவையாகும்.
2022 ஆம் ஆண்டில் அதிகப் புலிகள் எண்ணிக்கையானது மத்தியப் பிரதேசத்தில் (785) பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா (563), உத்தரகாண்ட் (560) மற்றும் மகாராஷ்டிரா (444) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மொத்த எண்ணிக்கையில் 2,526 புலிகள் மத்திய இந்திய மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப் படுகின்றன.
260 புலிகளுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப் பூங்கா அதிக பட்ச புலிகளைக் கொண்ட புலிகள் வளங்காப்பகமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் (150), மற்றும் நாகர்ஹோலே (141) ஆகியவை உள்ளன.
உலகளவில், 2016 ஆம் ஆண்டில் 3,890 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 5,575 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.3% பரப்பளவினைக் கொண்ட 75,796 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ள 53 பிரத்தியேக புலிகள் வளங்காப்பகங்களில் புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப் படுகின்றன.