சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்– தேசியப் புவி ஆராய்ச்சி நிறுவனமானது (National Geophysical Research Institute - NGRI) ‘இந்தியாவின் புவி வேதியியல் அடிப்படை வரைபடத்தை’ வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடமானது இந்தியா முழுவதும் உள்ள மேலடுக்கு மண் மற்றும் கீழடுக்கு மண் ஆகியவற்றில் இருக்கும் உலோகங்கள், ஆக்சைடுகள் மற்றும் தனிமங்கள் ஆகியவற்றின் விவரங்களைக் கொண்ட 45 வரைபடங்களைக் கொண்டுள்ளது.
இந்த வரைபடங்கள் மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய தொழில் நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளால் எதிர் காலத்தில் ஏற்படும் மாசுக்கள் பற்றிக் கண்டறிய உதவுகின்றன.
எடுத்துக்காட்டு: தோல் பதனிடுதல் நிறுவனம் குரோமியத்தை வெளியிடுகின்றது.
குரோமியத்தின் வரைபடத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கொள்கை வகுப்பாளர்கள் அதிக செறிவுள்ள குரோமியப் பகுதிகளை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் தோல் பதனிடும் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களை அனுமதிக்க மாட்டார்கள்.