- 25 ஜூன் 2017 அன்று இந்தியாவின் பொலிவுறு நகரங்களுக்கான விருதுகள் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது நகரங்களின் திட்டங்கள் மற்றும் புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கு வெகுமதியை வழங்குவதும், நகரங்களில் வளர்ச்சிக் குன்றா மேம்பாட்டினை ஊக்குவிப்பதும் ஆகும்.
- இந்த விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன.
- புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கான விருது
- நகரங்களுக்கான விருது
- திட்டங்களுக்கான விருது
புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கான விருது
- போபால் மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களும் இந்தப் பிரிவிற்கான கூட்டு வெற்றியாளர்கள் ஆவர். போபால் நகரம், ஒருங்கிணைந்த ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்காகவும் (ICCC-Integrated Commond & Control Centre) அகமதாபாத் நகரம் அதன் பாதுகாப்புத் திட்டத்திற்காகவும் (SASA-Safe and Secure) இவ்விருதுகளைப் பெறுகின்றன.
நகரங்களுக்கான விருது
- திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்த உத்வேகம் காட்டுவதற்காகவும், குறிப்பாக நகர்ப்புறச் சூழல், போக்குவரத்து மற்றும் இயக்கம், மற்றும் வளர்ச்சிக் குன்றா மேம்பாட்டில் உத்வேகம் காட்டுவதற்காகவும் சூரத் நகரத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
திட்டங்களுக்கான விருது
- இந்த விருது ஏப்ரல் 1, 2018-ல் முடிவடைந்த ஏழுப் பிரிவுகளை சேர்ந்த சிறந்த புதிய கண்ணோட்டம் கொண்ட மற்றும் வெற்றியடைந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டத் திட்டங்களாவன
- பூனாவின் ”ஆட்சி” பிரிவின் கீழ் வரும் நகராண்மைக் கழகப் பாதுகாப்புத் திட்டம் (PMC-Care).
- பூனாவின் சுற்றுச்சூழல் கட்டமைப்பின் கீழ்வரும் பொலிவுறு இடத்தினை உருவாக்கும் திட்டம்.
- புதுதில்லி மற்றும் ஜபல்பூரின் பொலிவுறு வகுப்பறை, விசாகப்பட்டினத்தின் பொலிவுறு வளாகம், பூனாவின் “சமூக அம்சங்கள் கீழ்வரும் கலங்கரை விளக்கம்”.
- (B-Nest) பி-னெஸ்ட் நோயரும்பு மையம்-போபால் மற்றும் “கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம்” பிரிவின் கீழ் வரும் ஜெய்ப்பூரின் ராஜஸ்தான் கலைப்பள்ளி பாதுகாப்பு.
- போபால், பூனா மற்றும் கோயம்புத்தூரின் பொது வாகன பங்கீடு மற்றும் “நகர சூழல்” பிரிவின் கீழ் வரும் ஜபல்பூரின் கழிவுகளை ஆற்றல் ஆலைகளுக்கு வழங்குதல் திட்டம்.
- அகமதாபாத் மற்றும் சூரத்தின் “போக்குவரத்து மற்றும் இயக்கம்” என்ற பிரிவின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்தப் போக்குவரத்து மேலாண்மை முறை (TMS-Integrated Transit Management System).
- அகமதாபாத்தின் “தண்ணீர் மற்றும் துப்புரவு” பிரிவின் கீழ்வரும் SCADA (SCADA-Supervisory Control & Data Acquisition) மூலம் இயங்கும் தண்ணீர் மேலாண்மை.