“இந்தியாவின் மந்தாரைகள் : படங்களைக் கொண்ட வழிகாட்டி“ என்பதானது இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தினால் (BSI - Botanical Survey of India) சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டது.
இது இந்தியாவில் உள்ள மந்தாரைகளின் முதலாவது விரிவான கணக்கெடுப்பாகும்.
1256 மந்தாரை இனங்களின் வாழிடமாக இந்தியா திகழ்கின்றது. அவற்றில் 388 வகை மந்தாரை இனங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
128 வகை மந்தாரை இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன.
இவை வடகிழக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
மந்தாரைகள் சிக்கலான மலர் அமைப்பைக் கொண்டுள்ளன. இது உயிரியல்சார் மலர்களுக்கிடையேயான மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய்கின்றது. இது மற்ற தாவரக் குழுக்களை விட பரிணாம ரீதியாக உயர்ந்ததாக மந்தாரைகளை ஆக்குகின்றது.
ஒட்டுமொத்த மந்தாரைக் குடும்பமும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகிவரும் இனங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) இணைப்பு – IIல் பட்டியலிடப்பட்டுள்ளன.
காடுகளில் உள்ள மந்தாரைகளின் வர்த்தகம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது.