இந்தியாவின் மருந்துத் துறை ஏற்றுமதியானது 2047 ஆம் ஆண்டிற்குள் 350 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போதைய நிலைகளை விட 10 முதல் 15 மடங்கிலான அதிகரிப்பாகும்.
இந்தியா தற்போது மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியின் மதிப்பில் 11வது இடத்தினைப் பெற்றுள்ளதுடன், 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா மருந்து ஏற்றுமதியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாக இடம் பெற முடியும்.
2023 ஆம் ஆண்டில் தோராயமாக 27 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியானது, 2030 ஆம் ஆண்டில் 65 பில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்பாட்டு மருந்துப் பொருட்கள் (API) ஏற்றுமதிகள் ஆனது தற்போது 5 பில்லியன் டாலர் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2047 ஆம் ஆண்டிற்குள் 80-90 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தற்போது 0.8 பில்லியன் டாலர் ஆக மதிப்பிடப்பட்டுள்ள இந்திய உயிரி ஒத்த மருந்து பொருட்கள் ஏற்றுமதியானது, 2030 ஆம் ஆண்டிற்குள் ஐந்து மடங்கு அதிகரித்து 4.2 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டும் என்றும், 2047 ஆம் ஆண்டிற்குள் 30-35 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.