TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய உலக மருந்து பொருட்கள் கருத்தரங்கு

February 15 , 2018 2505 days 855 0
  • “இந்திய மருந்து பொருட்கள் மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் 2018“ - எனும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.
  • மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான இந்த மூன்றாவது சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் கருப்பொருள் - “மலிவான மற்றும் தரமான சுகாதாரம்” (Affordable and Quality Healthcare)
  • தொழிற்சங்க அமைப்பான பிக்கி (FICCI - Federation of Indian Chamber of Commerce Industry) உடன் இணைந்து மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறை (Department of Pharmaceuticals) இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
  • இந்த மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக உலக சுகாதார நிறுவனத்தினால் “ஒழுங்குமுறை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் முன்தகுதி” (Regulatory System Strengthening and Prequalification) எனும் தலைப்பின் மீது பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்