TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய சிறுகடன் வழங்கீட்டு நிறுவனச் சந்தை

July 9 , 2023 377 days 202 0
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பீகார் மாநிலமானது, இந்தியாவிலேயே அதிக சிறுகடன்களைப் பெற்ற ஒரு மாநிலமாக மாறி தமிழ்நாடு மாநிலத்தினை முந்தி உள்ளது.
  • இது மார்ச் மாதக் காலாண்டில் மொத்தக் கடன் வழங்கீட்டுப் பிரிவில் பதிவான 13.5 சதவீத அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, பீகாரின் சிறுகடன் (MFI) மதிப்பு 48,900 கோடி ரூபாய் ஆகும்.
  • இது ஒட்டு மொத்த துறைக் கடன்களில் 14.5 சதவிகிதம் ஆகும்.
  • அதே சமயத்தில், தமிழ்நாட்டின் சிறு கடன்கள் 46,300 கோடி ரூபாயாக இருந்தது.
  • மொத்த நிலுவைக் கடனில் இது 13.7 சதவீதமாக உள்ளது.
  • பீகாரில் ஒரு கடனாளியின் சராசரி நிலுவை வழங்கீடு 27,200 ரூபாயாகும்.
  • இது தமிழ்நாட்டில் உள்ள 26,600 என்ற மதிப்பை விட சற்று அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்