மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின் படி, அமெரிக்க நாடானது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு வர்த்தகப் பங்குதார நாடாக மாறி உள்ளது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக அளவானது 119.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டியுள்ளது.
இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தை விட அதிகமாக உள்ளது.
சீன நாடானது 2013-2014 முதல் 2017-2018 வரையிலும், 2020-2021 வரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாகத்திகழ்ந்தது.