TNPSC Thervupettagam

இந்தியாவின் மின்னணு உற்பத்தி இலக்கு 2030

July 22 , 2024 10 hrs 0 min 48 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் உற்பத்தியை எட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 500 பில்லியன் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் உற்பத்தியானது 5 முதல் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
  • இது மொத்தமாக 240 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.
  • இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியின் தற்போதைய மதிப்பு ஆனது 2023 ஆம் நிதியாண்டின் படி 101 பில்லியன் டாலராக உள்ளது.
  • இதில் 86 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறைவு செய்யப்பட்டப் பொருட்களின் உற்பத்தியும், 15 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிபாகங்கள் தயாரிப்புகளும் அடங்கும்.
  • இதே காலக் கட்டத்தில், ஏற்றுமதியின் மதிப்பு மொத்தமாக 25 பில்லியன் டாலராகும்.
  • இத்துறையானது தற்போது 1.3 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்