2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் உற்பத்தியை எட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
500 பில்லியன் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் உற்பத்தியானது 5 முதல் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது மொத்தமாக 240 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.
இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியின் தற்போதைய மதிப்பு ஆனது 2023 ஆம் நிதியாண்டின் படி 101 பில்லியன் டாலராக உள்ளது.
இதில் 86 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறைவு செய்யப்பட்டப் பொருட்களின் உற்பத்தியும், 15 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிபாகங்கள் தயாரிப்புகளும் அடங்கும்.
இதே காலக் கட்டத்தில், ஏற்றுமதியின் மதிப்பு மொத்தமாக 25 பில்லியன் டாலராகும்.
இத்துறையானது தற்போது 1.3 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.