TNPSC Thervupettagam

இந்தியாவின் முதன்மை வர்த்தகப் பங்காளர்

February 27 , 2021 1241 days 553 0
  • சீனாவானது 2020 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் முதன்மை வர்த்தகப் பங்காளர் நாடாக உருவெடுத்துள்ளது.
  • இதற்குக் காரணம் சீனாவிடமிருந்து கனரக இயந்திரங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதாகும்.
  • தற்காலிகத் தரவின் படி, 2020 ஆம் ஆண்டில் இந்த 2 நாடுகளுக்கிடையேயான வர்த்தகமானது 77.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
  • எனினும், 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட வர்த்தகத்துடன் ஒப்பிடப் படும் போது தற்போதைய வர்த்தகமானது குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இது 85.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக இடைவெளி 40 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்