வதோதராவில் இந்த வாரத்தில் (செப்டம்பர்11) தேசிய இரயில் போக்குவரத்து நிறுவனம் (NRTI - National Rail and Transportation Institute) தொடங்கப்பட இருக்கிறது.
போக்குவரத்துத் துறையில் நாட்டின் முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும்.
தற்பொழுது இது வதோதராவில் உள்ள தேசிய இந்திய இரயில்வே அகாதெமியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
இதற்கு மத்திய இரயில்வே அமைச்சகம் நிதியளிக்கிறது. இதன் சர்வதேசப் பங்காளர்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்கிலி மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் ஆகியவை ஆகும்.