இந்தியாவின் முதலாவது உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகம் - தஞ்சாவூர்
November 18 , 2021 1108 days 853 0
சமீபத்திய உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தில் பின்வருபவை காட்சிப் படுத்தப் பட்டு இருக்கின்றன.
நாடோடி வேட்டைக்காரக் குழுக்களில் இருந்து ஓர் இடத்தில் குடியேறி விவசாய நடைமுறைகளுக்கு மாறிய மனிதனின் பரிணாமம்,
பண்டையக் கால உலகளாவிய மற்றும் உள்நாட்டுத் தானியச் சேமிப்பு முறைகள்,
அந்தச் சேமிப்பில் உள்ள சவால்கள் மற்றும்
இந்திய உணவுக் கழகத்தின் மூலம் வேளாண் நிலத்தில் இருந்து நமது தட்டினை வந்தடையும் வரை உணவு தானியங்களின் பயணம்.
இந்த அருங்காட்சியகமானது இந்திய உணவுக் கழகம் மற்றும் பெங்களூருவின் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகங்களால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் நகர் தான் இந்திய உணவுக் கழகத்தின் பிறப்பிடமாகும்.
இந்திய உணவுக் கழகத்தின் முதல் அலுவலகமானது 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று தஞ்சாவூரில் திறக்கப்பட்டது.