TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு எரிபொருள் மின்கலம்

September 27 , 2019 1760 days 643 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர் வெப்பநிலை எரிபொருள் மின்கல அமைப்பை வெளியிட்டார்.
  • இது தொலைத் தொடர்பு கோபுரங்கள், தொலைதூர இடங்கள் மற்றும் உத்தி சார்ந்த பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான திறனுள்ள, சுத்தமான மற்றும் நம்பகமான காப்பு மின்சக்தி உற்பத்தி அமைப்பின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
  • இந்த 5.0 கிலோவாட் திறனுள்ள எரிபொருள் மின்கல அமைப்பானது மெத்தனால்/உயிரி மீத்தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பசுமை முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.
  • டீசலால் இயங்கும் மின் உற்பத்தி சாதனங்களை உருவாக்கும் அமைப்புகளை மாற்றுவதற்கும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் இது உதவுகின்றது.
  • இது 3 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல்சார் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் - தேசிய வேதியியல் ஆய்வகம், புனே; CSIR – தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி & CSIR - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டது.
  • பயன்பாடுகள்: சிறிய அலுவலகங்கள், வணிக அலகுகள் மற்றும் தரவு மையங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்