இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர் வெப்பநிலை எரிபொருள் மின்கல அமைப்பை வெளியிட்டார்.
இது தொலைத் தொடர்பு கோபுரங்கள், தொலைதூர இடங்கள் மற்றும் உத்தி சார்ந்த பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான திறனுள்ள, சுத்தமான மற்றும் நம்பகமான காப்பு மின்சக்தி உற்பத்தி அமைப்பின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
இந்த 5.0 கிலோவாட் திறனுள்ள எரிபொருள் மின்கல அமைப்பானது மெத்தனால்/உயிரி மீத்தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பசுமை முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.
டீசலால் இயங்கும் மின் உற்பத்தி சாதனங்களை உருவாக்கும் அமைப்புகளை மாற்றுவதற்கும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் இது உதவுகின்றது.
இது 3 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல்சார் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் - தேசிய வேதியியல் ஆய்வகம், புனே; CSIR – தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி & CSIR - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டது.
பயன்பாடுகள்: சிறிய அலுவலகங்கள், வணிக அலகுகள் மற்றும் தரவு மையங்கள்.