இந்தியாவின் முதலாவது குவியத் திட்டம் (ஒருங்கிணைக்கப் பட்டது)
November 21 , 2020 1470 days 626 0
வேளாண் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவின் முதலாவது குவியத் திட்டமானது கோவாவில் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகிய மூன்றும் ஒன்று சேர்க்கப் பட்ட கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டு அதிகரித்து வரும் ஆற்றல் தீர்வுகளின் மீது கவனம் செலுத்துகின்றது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கார்பன் நீக்கத்திற்கு வழிவகுக்கும் தீர்வுகளை வழங்கும் வகையில் எல்இடி விளக்குகள், சூரிய ஒளி ஆற்றல் மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்ற துறைகளை இணைப்பதாகும்.
அமைப்புசார், சமூகம், நிறுவனம் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும் திட்டங்கள் குவியத் திட்டங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 40 ஜிகாவாட் என்ற அளவில் மேற்கூரை சூரிய ஒளி உற்பத்தி ஆற்றல் பொருத்தப்படுவதற்கான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைவது என்ற ஒரு முதன்மை இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 36.17% நிறுவப்பட்ட மின்சார உற்பத்தியானது புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்துப் பெறப் பட்டதாகும்.
இந்தியாவின் தேசிய அளவிலான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கு என்பது புதைபடிவம் அல்லாத எரிபொருளிலிருந்து 40% என்ற அளவிற்கு மொத்த மின்சார உற்பத்தியை 2030 ஆம் ஆண்டில் அடைவதாகும்.