TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பு

October 18 , 2019 1921 days 802 0
  • தமிழ்நாடு அரசானது சென்னையில் ஒரு ‘சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பை’ ஏற்படுத்த இருக்கின்றது.
  • இது மழைக் காலங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகளின் விவரங்களைப் பெற அதிகாரிகளுக்கு உதவ இருக்கின்றது.
  • சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பைப் பெற்ற இந்தியாவின் முதலாவது நகரமாக சென்னை உருவெடுக்க இருக்கின்றது.
CFLOWS
  • CFLOWS எனப்படும் தொழில்நுட்பமானது இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு ஆகும்.
  • CFLOWS என்பது வலைதளப் புவியியல் தகவல் முறைமை அடிப்படையிலான தீர்வுகளை அளிக்கும் ஒரு ஆதரவு அமைப்பு ஆகும்.
  • இது வானிலை முன்னறிவிப்பு, ஹைட்ரோலஜிக் (நீரியல்), ஹைட்ராலிக் மற்றும் நீரியக்கவியல் மாதிரிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் முடிவுகளை ஒருங்கிணைக்கின்றது.
  • உள்கட்டமைப்புகள், கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வார்டு எல்லை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தின் முப்பரிமாண காட்சிகள் உட்பட 6 கூறுகள் இதில் உள்ளன.
  • இது 10 நாட்களுக்கு முன்பே சாத்தியமான நீரில் மூழ்கும் பகுதிகள் பற்றிய முன்னறிவிப்பை வழங்கும்.
இதனுடன் தொடர்புள்ள அமைப்புகள்
  • மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
  • முழுமையாக செயல்படும் CFLOWSற்கான இணைப்பானது தேசியக் கடலோர ஆராய்ச்சி மையத்தினால் (National Centre for Coastal Research - NCCR) மாநில பேரிடர் மேலாண்மை கழகத்திற்கு முறையாக ஒப்படைக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்