இந்தியாவின் முதலாவது பனிச் சிறுத்தை பாதுகாப்பு மையம்
August 7 , 2020 1575 days 1161 0
உத்தரகண்ட் மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பனிச் சிறுத்தை பாதுகாப்பு மையத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது.
இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து உத்தரகண்ட் வனத் துறையினால் கட்டப்பட உள்ளது.
இது உயரிய இமயமலை சூழலமைப்பின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், பாதுகாப்பு, நீடித்தப் பயன்பாடு, மீட்டெடுப்பு என்ற 6 ஆண்டு காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பனிச் சிறுத்தையானது பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
பெரிய பூனைகளை வேட்டையாடுதல் மற்றும் அவற்றைக் கடத்தவதற்கு எதிராக உயரியப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் பட்டியல் – I
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய இனம்”.