TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது பெண் மற்றும் பழமையான இதய நோய் நிபுணர்

September 3 , 2020 1423 days 619 0
  • சமீபத்தில் இந்தியாவின் முதலாவது பெண் மற்றும் பழமையான இதய நோய் நிபுணரான டாக்டர் S. பத்மாவதி காலமானார்.
  • இவர் இந்தியாவில் லேடி ஹார்டின்ஜ் மருத்துவக் கல்லூரியில் முதலாவது சிறுநீர் இறங்குகுழல் ஆய்வகத்தையும் இருதய நோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தி உள்ளார்.
  • இவர்இருதயத்தின் ஞானமாதா” (God Mother of Cardiology) என்று சிறப்பாக அறியப் படுகின்றார்.
  • இவர் பத்மபூஷண் (1967) மற்றும் பத்ம விபூஷண் (1992) விருதுகளைப் பெற்று உள்ளார்.
  • இவர் ரங்கூனில் உள்ள ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண் மாணவி ஆவார்.
  • இவர் இதயத் துறையில் இந்தியாவின் முதலாவது மருத்துவ முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  • இவர் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, லோக் நாயக் மருத்துவமனை மற்றும் G.B. பந்த் மருத்துவமனை ஆகிய 3 முக்கிய மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய முதலாவது மற்றும் ஒரே நபராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்