TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது மாவட்ட குளிர்விக்கும் அமைப்பு

February 20 , 2019 1978 days 569 0
  • இந்தியாவின் முதலாவது மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் அமையவிருக்கிறது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையாகக் கொண்டு செயல்படும் சர்வதேச குளிர்விக்கும் அமைப்பை வழங்குநரான “தப்ரீட்” ஆனது மாவட்ட குளிர்விக்கும் அமைப்பைக் கட்டமைத்து, நிர்வகித்து, செயல்படுத்தி மற்றும் மாற்றுவதற்காக ஆந்திரப் பிரதேச அரசுடன் ஒரு 30 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மாவட்ட குளிர்விக்கும் அமைப்புகள் மைய ஆலைகளில் குளிர்விக்கப்பட்ட நீர், நீராவி மற்றும் சூடான நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அதன் மூலம் வெளிப்படும் ஆற்றலை குழாய்களின் மூலம் குளிரூட்டுவதற்காக கட்டிடங்களுக்கு அனுப்புகின்றன.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றம், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம் மற்றும் இதர அரசு அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் குளிர்விக்கும் தேவைகளை இந்த அமைப்பு பூர்த்தி செய்யும்.
  • இந்த மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது நகரக் கட்டிடங்களைக் குளிர்விப்பதற்காக 50 சதவிகித அளவிற்கு முதன்மை ஆற்றல் நுகர்வை மட்டுமே பயன்படுத்தும்.
  • மேலும் இது கார்பன் உமிழ்வைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்