இந்தியாவின் முதலாவது லேசர் வேலி சோதனைத் திட்டம் இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இடத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமையகமான, ஜம்முவில் உள்ள புளோரா என்னுமிடத்தில் மத்திய உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பம் எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் எல்லைப் பாதுகாப்புப் படையால் செயல்படுத்தப்படுகிறது.
இது விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பின் (CIBMS - Comprehensive Integrated Border Management System) ஒரு பகுதியாகும்.
இந்த சோதனைத் திட்டம் எல்லையில் உள்ள இடைவெளிகளில் தொழில்நுட்பத் தடைகள் மற்றும் லேசர் வேலி ஆகியவற்றை ஏற்படுத்த எண்ணுகிறது.