TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது ‘விதேஷ் பவன்’ மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது

August 28 , 2017 2680 days 966 0
  • மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா பகுதியில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று இந்தியாவின் முதலாவது வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தை (Vidhesh Bhavan) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
  • முதலாவது முன்முயற்சித் திட்டமாக (Pilot Project), மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் நான்கு அலுவலகங்களை ஒரே இடத்தில் நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளது.
  • அவையாவன :
    • பிராந்தியக் கடவுச்சீட்டு அலுவலகம் (Regional Passpost Office (RPO)
    • குடிபெயர்பவர்களின் காப்பாளர் அலுவலகம் (Protector & Emigrants Office – POE)
    • கிளைச் செயலகம் (Branch Secretariat)
    • அயல் நாடுகளுடனான கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவின் (ICCR- Indian Council for Cultural Relations) பிராந்திய அலுவலகம்.
  • மும்பையில் அமைக்கப்பட்டுள்ள விதேஷ் பவன் கட்டிடமானது, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் கொள்கையில் ஒரு பகுதியாகும்.
  • இதன் மூலம், வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அதிகமுள்ள நாடுகளோடு நெருங்கியத் தொடர்போடு பணியாற்ற இயலும்.
  • மும்பையில் அமைக்கப்பெற்ற இந்த ‘விதேஷ் பவன்’ மத்திய வெளியுறவு அமைச்சகத்தினுடைய வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலான முதலாவது ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்