இந்தியாவின் முதலாவது ‘விதேஷ் பவன்’ மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது
August 28 , 2017 2646 days 945 0
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா பகுதியில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று இந்தியாவின் முதலாவது வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தை (Vidhesh Bhavan) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
முதலாவது முன்முயற்சித் திட்டமாக (Pilot Project), மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் நான்கு அலுவலகங்களை ஒரே இடத்தில் நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளது.
அவையாவன :
பிராந்தியக் கடவுச்சீட்டு அலுவலகம் (Regional Passpost Office (RPO)
குடிபெயர்பவர்களின் காப்பாளர் அலுவலகம் (Protector & Emigrants Office – POE)
கிளைச் செயலகம் (Branch Secretariat)
அயல் நாடுகளுடனான கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவின் (ICCR- Indian Council for Cultural Relations) பிராந்திய அலுவலகம்.
மும்பையில் அமைக்கப்பட்டுள்ள விதேஷ் பவன் கட்டிடமானது, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் கொள்கையில் ஒரு பகுதியாகும்.
இதன் மூலம், வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அதிகமுள்ள நாடுகளோடு நெருங்கியத் தொடர்போடு பணியாற்ற இயலும்.
மும்பையில் அமைக்கப்பெற்ற இந்த ‘விதேஷ் பவன்’ மத்திய வெளியுறவு அமைச்சகத்தினுடைய வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலான முதலாவது ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடமாகும்.